Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு

ADDED : ஜூன் 18, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
ஒட்டாவா: ஈரான் ஒருபோதும அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என ஜி7 மாநாடு நிறைவு விழாவில் கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில் தெரிவித்தனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. நடப்பாண்டிற்கான, 'ஜி - 7' நாடுகளின் உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

ஜி7 மாநாடு நிறைவு விழாவில் கனடா பிரதமர் மார்க் கார்னி பேசியதாவது: மீண்டும் உயர் தூதர்களை நியமிக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரதமர் மோடி உடன் இன்றைய சந்திப்பு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு G7 மாநாட்டிலும் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டு பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் வருவார் என்று நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன்.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ஜி7 தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். பிராந்திய ஸ்திரமின்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக ஈரான் உள்ளது. மேலும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் நாங்கள் தொடர்ந்து தெளிவாக இருக்கிறோம். ஈரான் நெருக்கடியைத் தீர்ப்பது, காசாவில் போர் நிறுத்தம் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண நாங்கள் வலியுறுத்துகிறோம்.

உக்ரைன் தங்கள் நாட்டின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ட்ரோன்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றிற்காக இரண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவியையும், உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப 2.3 பில்லியன் டாலர் கடனையும் நாங்கள் அனுப்புகிறோம். இவ்வாறு கனடா பிரதமர் மார்க் கார்னி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us