Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்

டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்

டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்

டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்

ADDED : ஜூன் 18, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
ஜெருசலேம்; டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிகுந்த கண்காணிப்புடன் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது.

ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர், அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. டெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் முன்பை விட அதி தீவிரம் அடைந்துள்ளது.

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்வதே இரு நாடுகளுக்கு இடையே எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி இருந்தார். அவரின் இருப்பிடம் தெரிந்துவிட்டது, அவர் சரண் அடைந்துவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான், இஸ்ரேல் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிகுந்த கண்காணிப்புடன் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் புதிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.

இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது;

* தேசிய அவசரநிலை அமலில் உள்ளதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகள், ஆலோசனைகளை இந்திய குடிமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* இஸ்ரேலில் இருந்து வெளியேற எத்தனிக்கும் இந்தியர்கள், நாட்டின் எல்லைகளை கடப்பதில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

* இந்த எல்லைகளை தேர்வு செய்யும் குடிமக்கள், அங்குள்ள நிலைமைகள், செயல்படும் நேரம், விசா மற்றும் அதற்கான கட்டண விவரங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* தற்போது புதுப்பிக்கப்பட்ட அல்லது புதிய தகவல்கள், வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ள இஸ்ரேலிய விமான நிலைய ஆணையத்தின் வலைதளமான https://www.iaa.gov.il/en/. உள் துழையலாம்.

* இஸ்ரேலில் இருக்க விரும்பும் இந்தியர்கள் அங்குள்ள தூதரகத்தில் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை https://www.indembassyisrael.gov.in/indian_national_reg உள்நுழைந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* உதவி தேவைப்படுவோர் +972 54-7520711, +972 54-3278392என்றதொலைபேசி எண்களிலும், cons1.telaviv@mea.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் அணுகலாம்.

* ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்திய குடிமக்கள், இ விசாக்களுக்கு அதற்குரிய இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us