கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவம்
கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவம்
கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவம்
ADDED : செப் 11, 2025 02:24 AM
மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு வாரம் நடைபெற உள்ள கூட்டு போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக நம் ராணுவம் சென்றது.
ரஷ்யாவில், 16ம் தேதி வரை, ஒரு வார பல தரப்பு கூட்டு ராணுவப் பயிற்சி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவம் சென்றுள்ளது.
ரஷ்யாவின் நிஸ்னியில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்தில், இந்த போர் பயிற்சி நடக்கிறது. போர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தந்திரங்கள், நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த பயிற்சி நடக்கிறது.
இதற்காக, இந்திய ராணுவத்தின், 57 பேர், விமானப்படையின், ஏழு பேர், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் என, 65 வீரர்கள் சென்றுள்ளனர்.