இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை
இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை
இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை
ADDED : ஜூலை 17, 2024 06:15 PM

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் 19 வயதுக்கு உட்பட்ட அணி கேப்டனாக செயல்பட்ட தம்மிகா நிரோஷனா, சுட்டு கொல்லப்பட்டார். அவரது வீடு முன்பு நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2000 முதல் 2002 வரை இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியின் கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. தற்போது அவருக்கு 41 வயதாகிறது. தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத இவர் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றார்.
நேற்று( ஜூலை 16) இரவு, இலங்கையின் அம்பலாங்கொடாவில் உள்ள அவரது வீடு முன்பு மர்ம நபர் ஒருவரால் நிரோஷனா சுட்டுக் கொல்லப்பட்டார். கும்பல் மோதல் காரணமாக இக்கொலை நடந்து இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.