ADDED : ஜூன் 04, 2025 07:28 AM

ரோம்: ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான மவுன்ட் எட்னா உள்ளது.
நேற்று மவுன்ட் எட்னா எரிமலையில் இருந்து வான் உயரத்திற்கு புகை, சாம்பல் வெளிப்பட்டது.
இதைப்பார்த்த சுற்றுலாப் பயணியர் அங்கிருந்து தப்பி ஓடினர். சில மணி நேரங்களில் எரிமலையில் இருந்து லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு அப்பகுதியில் பாய்ந்தோடியது.