இஸ்ரேல் மீது பொருளாதார தடை ஐரோப்பிய கமிஷன் வலியுறுத்தல்
இஸ்ரேல் மீது பொருளாதார தடை ஐரோப்பிய கமிஷன் வலியுறுத்தல்
இஸ்ரேல் மீது பொருளாதார தடை ஐரோப்பிய கமிஷன் வலியுறுத்தல்
ADDED : செப் 11, 2025 02:22 AM
பாரிஸ்:காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை மற்றும் வர்த்தக தடை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது.
காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மீது பொருளாதார தடை மற்றும் பகுதி வர்த்தக தடை மேற்கொள்ள ஐரோப்பிய கமிஷன் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் உர்சுலா நேற்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
காசாவில் நடந்த நிகழ்வுகளும், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் துயரங்களும் உலகின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. எனவே காசாவின் எதிர்கால மறுகட்டமைப்பில் கவனம் செலுத்தும் வகையில் பாலஸ்தீன நன்கொடையாளர் குழு காசாவில் அடுத்த மாதம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அணுகுமுறை குறித்து 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகள் பொருளாதார மற்றும் வர்த்தகம் தடைகளை அனுமதிக்குமா என்று தெரியவில்லை.