Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு கிடையாது; ராகுலின் பேச்சை நிராகரித்த காங்., எம்.பி., சசி தரூர்

போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு கிடையாது; ராகுலின் பேச்சை நிராகரித்த காங்., எம்.பி., சசி தரூர்

போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு கிடையாது; ராகுலின் பேச்சை நிராகரித்த காங்., எம்.பி., சசி தரூர்

போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு கிடையாது; ராகுலின் பேச்சை நிராகரித்த காங்., எம்.பி., சசி தரூர்

UPDATED : ஜூன் 05, 2025 05:16 PMADDED : ஜூன் 05, 2025 11:34 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: அமெரிக்காவின் தலையீடு காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போரை இந்தியா நிறுத்தி விட்டதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் விமர்சனத்திற்கு, காங்., எம்.பி., சசிதரூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா பயங்கர தாக்குதலை நடத்தியது. பிறகு, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால், வர்த்தக உறவை காரணம் காட்டி போரை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறினார். அவரது இந்த கூற்றை, இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

டிரம்ப்பிடம் பிரதமர் மோடி சரண்டர் ஆகிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சனம் செய்து வந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா மட்டும் இருந்திருந்தால், பாகிஸ்தானை இரண்டாக்க பிளவுபடுத்தி இருப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து அமெரிக்காவில் விளக்கம் அளிக்க சென்றுள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், ராகுலின் விமர்சனத்தை நிராகரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; போரை நிறுத்துமாறு இந்தியாவை நிறுத்த யாரும் வற்புறுத்த வேண்டியதில்லை. நாங்களே பாகிஸ்தானிடம் கூறினோம். பாகிஸ்தான் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்தத் தயாராக இருப்பதாக நாங்களே கூறினோம். பாகிஸ்தான் அதை ஏற்றுக் கொண்டதன் பேரில் போர் நிறுத்தப்பட்டது. இனி பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், இந்தியா படைகளை பயன்படுத்த தயாராக உள்ளது. பயங்கரவாதம் எனும் மொழியில் பாகிஸ்தான் பேசும் வரையில், நாம் ராணுவத்தின் மொழியில் பதிலடி கொடுப்போம். இதற்கு 3ம் தரப்பு தலையீடு தேவையில்லை. அமெரிக்காவுடன் நமக்கு மிக முக்கியமான உறவு உள்ளது, எனக் கூறினார்.

சசி தரூரின் இந்தப் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்த மத்திய குழுவின் மற்றொரு பிரதிநிதியான மிலிந்த் தியோரா, 'அவர் எப்போதும் கட்சிக்கு முன்பாக நாட்டை பற்றியே சிந்திக்கிறார்,' என்று குறிப்பிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us