Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவர் நியமனம்

பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவர் நியமனம்

பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவர் நியமனம்

பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவர் நியமனம்

ADDED : ஜூன் 17, 2025 04:26 AM


Google News
Latest Tamil News
லண்டன்: 'எம்.ஐ., - 6' எனப்படும் பிரிட்டன் உளவு அமைப்பின் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் எம்.ஐ., - 6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, 'சி' என்று குறிப்பிடுவர்.

இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும். மற்றபடி, அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும்.

தற்போதைய தலைவரான சர் ரிச்சர்ட் மூரே, விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள பிளேசி மெட்ரவெலி, 47, புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த உளவு அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் எம்.ஐ., - 5 உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவி களை இவர் வகித்துள்ளார். கடந்த 1999 முதல் அவர், உளவு அமைப்பில் பணியாற்றி வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us