இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; ஒருவர் உயிரிழப்பு
இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; ஒருவர் உயிரிழப்பு
இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 19, 2024 11:07 AM

டெல் அவிவ்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (ஜூலை 18) டுரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் 8 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக அந்நாட்டு ராணுவம் விரிவான விசாரணை நடத்தி வரும் நிலையில், விமானப்படை விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன. தாக்குதல் நடத்தப்பட்டாலும், சைரன் ஒலிக்கப்படவில்லை.
இந்த தாக்குதல் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பு வீடியோ வெளியிட்டு உள்ளது.