இந்தியா எங்களை தடுக்கிறது: அஜர்பைஜான் அபாண்டம்
இந்தியா எங்களை தடுக்கிறது: அஜர்பைஜான் அபாண்டம்
இந்தியா எங்களை தடுக்கிறது: அஜர்பைஜான் அபாண்டம்
ADDED : செப் 02, 2025 07:42 PM

பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் நாங்கள் முழு உறுப்பினர் ஆவதை இந்தியா தடுக்கிறது என அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு உள்ளதால் சர்வதேச அமைப்புகளில் எங்களை பழிவாங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான அஜர்பைஜான், பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பில் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பாகிஸ்தானுக்கு அஜர்பைஜான் வெளிப்படையாக ஆதரவு அளித்தது. இதனால், அந்நாட்டுக்கு செல்வதை சுற்றுலா செல்வதையும் நம் நாட்டினர் தவிர்த்து வருகின்றனர்.
அந்நாடு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறது. மேலும், அதில முழு நேர உறுப்பினராகவும் முயன்று வருகிறது.
இந்நிலையில், இந்த அமைப்பில் முழு நேர உறுப்பினராகும் தங்களின் முயற்சியை இந்தியா தடை செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. நாங்கள் பாகிஸ்தானுடன் கொண்டுள்ள உறவு காரணமாக, சர்வதேச அமைப்புகளில் எங்கள் மீது இந்தியா பழிவாங்கி வருகிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளது.
ராஜதந்திர விதிமுறைகளை இந்தியா மீறுகிறது என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அஜர்பைஜான் முழுநேர உறுப்பினராகும் முயற்சிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஆர்மீனியாவுடன் உறவுகளை மறுபரிசீலனை செய்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது எங்கள் நாட்டின் அமைதி நடவடிக்கையின் ஒரு பகுதி எனத்தெரிவித்துள்ளது.
இதனிடையே சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்த பிறகு அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் கூறுகையில், சரவ்தேச அமைப்புகளில் இந்தியாவின் நடவடிக்கையையும் மீறி பாகிஸ்தானுடன் உறவுக்கு முக்கியத்துவம் அளிப்போம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அரசியல், கலாசார உறவு கொண்டது எனக் கூறியுள்ளார்.