/செய்திகள்/உலகம்/ ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி தாக்குதல்

ADDED : ஜூலை 25, 2025 01:53 AM


Google News
மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஹிந்து கோவில், ஆசிய உணவகங்கள் மீது இனவெறியை வெளிப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், 'கார் பார்க்கிங்' பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்ற இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. நிறம் குறித்த கருத்துகளை கூறி திட்டியபடி சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், மெல்போர்னின் போர்னியா பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிவப்பு பெயின்டில் இனவெறி வாசகங்களை எழுதிச் சென்றுள்ளனர்; 'நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என ஹிட்லரின் புகைப்படத்துடன் பெயின்டால் எழுதியிருந்தனர்.

மேலும், அதே பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களில் இனவெறி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.