ஆசிய தடகளத்தில் தங்கப் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்
ஆசிய தடகளத்தில் தங்கப் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்
ஆசிய தடகளத்தில் தங்கப் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்

குமி: ஆசிய தடகளத்தின் ஸ்டிபிள் சேஸில் இந்தியாவின் அவினாஸ் 3,000 மீ., பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். கடந்த 36 ஆண்டுகளில் இந்த பதக்கத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்து உள்ளது. மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்து உள்ளது.
தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது.இந்தியா சார்பில் 58 பேர் உட்பட, 43 நாடுகளில் இருந்து 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இன்று நடந்த ஸ்டிபிள் சேஸ் ஓட்ட இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தேசிய அளவில் சாதனை படைத்த அவினாஸ் பங்கேற்றார். 3, 000 மீ., பிரிவில் பந்தய தூரத்தை 8 நிமிடம் 20 வினாடிகளில் கடந்த அவினாஸ் முதலிடம் பிடித்து தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
மகளிர் 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஜோதி யார்ராஜி தங்கம் வென்று சாதனை படைத்தார். 12.96 வினாடிகளில் அவர் பந்தய தூரத்தை சென்றடைந்தார்
மகளிர் 400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றது. 3:34:18 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய அணியில் இடம்பெற்று இருந்த சுபா வெங்கடேசன் நேற்று தங்கம் வென்று இருந்தார்.
ஆடவர் 400 மீ., தொடர் ஓட்டத்தில் ஆடவர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்திய அணியில் இடம்பெற்று இருந்த விஷால் நேற்று நடந்த 400 மீ., கலப்பு தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆசிய தடகளத்தில் தமிழகத்தை வீரர்கள் 6 பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களை பெற்றுள்ளது.