காலிஸ்தான் பயங்கரவாதிக்கு பார்லி.,யில் மவுன அஞ்சலி: கனடா பிரதமருக்கு எதிர்ப்பு
காலிஸ்தான் பயங்கரவாதிக்கு பார்லி.,யில் மவுன அஞ்சலி: கனடா பிரதமருக்கு எதிர்ப்பு
காலிஸ்தான் பயங்கரவாதிக்கு பார்லி.,யில் மவுன அஞ்சலி: கனடா பிரதமருக்கு எதிர்ப்பு
ADDED : ஜூன் 25, 2024 02:11 PM

ஒட்டாவா: கனடா பார்லிமென்டில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவரது கட்சி எம்.பி., எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு ஜூன் 18 ம்தேதி அந்நாட்டு பார்லிமென்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி எம்.பி., சந்திரா ஆர்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பார்லிமென்டில் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என முடிவு செய்தால், கனடாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சிறப்பு மிக்கவர்களுக்கு அதை செய்து இருக்க வேண்டும். ஹர்திப் சிங் நிஜ்ஜார் அந்த மாதிரி எதையும் செய்யவில்லை. அவரது கொலையில் வெளிநாட்டு அரசை குற்றம்சாற்றிவிட்டு அவரை புகழ்வது சரியானது அல்ல. இவ்வாறு சந்திரா ஆர்யா கூறினார்.
சந்திரா ஆர்யா, கனடாவின் நெபியான் பகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டவர். பிரதமர் மோடியுடன் நட்புடன் உள்ளார். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு செயல்படுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.