ஷாப்பிங் மாலில் தீ விபத்து சீனாவில் 16 பேர் உயிரிழப்பு
ஷாப்பிங் மாலில் தீ விபத்து சீனாவில் 16 பேர் உயிரிழப்பு
ஷாப்பிங் மாலில் தீ விபத்து சீனாவில் 16 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 19, 2024 01:14 AM
பீஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிக்காங்கில், 16 மாடி கொண்ட ஷாப்பிங் மால் உள்ளது. அலுவலகங்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ள இந்த மாலின் தரைதளத்தில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கரும்புகை எழுந்ததால் அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். பலர் கட்டடத்தின் பால்கனியில் குவிந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், கட்டடத்தில் சிக்கி தவித்த 75க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றினர். பல மணி நேர போராட்டத்துக்கு பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி, 16 பேர் பலியாகினர்.
தீயணைப்புத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கட்டுமான பணியின் போது ஏற்பட்ட தீ, ஷாப்பிங் மால் முழுதும் பரவி தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.