Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ அதிருப்தியாளர்களுக்கு எதிராக ரஷ்ய அரசு அதிரடி நடவடிக்கை

அதிருப்தியாளர்களுக்கு எதிராக ரஷ்ய அரசு அதிரடி நடவடிக்கை

அதிருப்தியாளர்களுக்கு எதிராக ரஷ்ய அரசு அதிரடி நடவடிக்கை

அதிருப்தியாளர்களுக்கு எதிராக ரஷ்ய அரசு அதிரடி நடவடிக்கை

ADDED : ஜூன் 02, 2024 01:33 AM


Google News
மாஸ்கோ, பிரபல மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் பலரை, 'வெளிநாட்டு ஏஜன்ட்'கள் என, ரஷ்ய அதிகாரிகள் அறிவித்தனர்.

ரஷ்யாவில், விளாடிமிர் புடின் அதிபராக உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, இரு ஆண்டுகளுக்கும் மேல், ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இதை அந்நாட்டில் உள்ள பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2012 முதல், அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் அதிபர் மாளிகையை விமர்சிக்கும் தனிநபர்களை, வெளிநாட்டு ஏஜன்ட் என, ரஷ்யா முத்திரை குத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த, பிரபல மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் பலரை, 'வெளிநாட்டு ஏஜன்ட்'கள் என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடினுக்கு எதிராக போட்டியிட முயன்ற முன்னாள் பிராந்திய சட்டசபை உறுப்பினர் யெகாடெரினா டன்ட்சோவா, வெளிநாட்டு ஏஜன்ட் பட்டியலில் உள்ளார்.

சிறைக் கைதிகள் உரிமை வழக்கறிஞர் மரியா லிட்வினோவிச் மற்றும் இரு பிரபல செய்தி நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.

யெகாடெரினா டன்ட்சோவா உக்ரைனில் அமைதிக்காக பிரசாரம் செய்ததற்காகவும், மரியா லிட்வினோவிச் ரஷ்யா போருக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us