UPDATED : ஜூலை 06, 2024 10:56 AM
ADDED : ஜூலை 06, 2024 02:31 AM
பிரிட்டனில் நடந்த பார்லி., தேர்தலில், பழமைவாத கட்சி, வரலாறு காணாத தோல்வியை தழுவியதால், ரிஷி சுனக், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக தோல்வி முகத்தில் இருந்த தொழிலாளர் கட்சி 412 இடங்களை பிடித்து அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிஉள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த கேர் ஸ்டாமர், புதிய பிரதமராகிறார்.