இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி வென்றது
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி வென்றது
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி வென்றது
UPDATED : ஜூலை 28, 2024 11:56 PM
ADDED : ஜூலை 28, 2024 11:33 PM

கண்டி:இலங்கை அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது. அந்த அணியின் குசல் பெரேரா நிலைத்து ஆடி அரை சதம் (53)அடித்தார். நிஷங்கா 32 ரன்களுக்கு அவுட் ஆனார். மெண்டிஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல் மற்றும் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
162 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து விளையாடிய இந்திய அணி, முதல் ஓவரை எதிர்கொண்டபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.அதை தொடர்ந்து போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி,8 ஓவரில் 78 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 6.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 30 ரன்களும் கேப்டன் சூர்யகுமார் 26 ரன்களும் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 22 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.