ADDED : மார் 12, 2025 01:40 AM
பாகிஸ்தான் முன்னாள் எம்.பி., அப்துல் காதிர் பலுச் என்பவர் கூறியதாவது:
ரயில் பயணியரை மீட்பதற்காக, பயங்கரவாதிகளை நோக்கி, பாகிஸ்தான் ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பயங்கரவாதிகள் கடுமையான பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 150 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆனால், இதை உறுதிப்படுத்த முடியவில்லை. பிணைக்கைதிகளாக உள்ளவர்களின் உறவினர்கள், ரயில்வே ஸ்டேஷன்களில் குவிந்துள்ளதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.