Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரயிலில் விழுந்து இளம்பெண், மினிபஸ் டிரைவர் தற்கொலை

ரயிலில் விழுந்து இளம்பெண், மினிபஸ் டிரைவர் தற்கொலை

ரயிலில் விழுந்து இளம்பெண், மினிபஸ் டிரைவர் தற்கொலை

ரயிலில் விழுந்து இளம்பெண், மினிபஸ் டிரைவர் தற்கொலை

ADDED : மார் 12, 2025 09:20 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி குதிரையாறு அணைப்பகுதியில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் 35. மினிபஸ் டிரைவர். இவருக்கு திருமணம் முடித்து குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மினி பஸ்சில் பயணம் செய்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி அன்னை சத்யா தெரு ரத்தினசாமி மகள் சம்யுக்தாவுக்கும் 21, டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு டி.என்.94 டி 7099 என்ற பதிவு எண் கொண்ட டூவீலரில் பழநியில் இருந்து இருவரும் தேனி வந்தனர். மதுரை ரோடு குன்னூர் பாலம் ரோட்டின் ஓரம் வந்தவர்கள், ரயில்வே பாலம் அருகே டூவீலரை நிறுத்தி விட்டு தண்டவாளத்தில் ஏறி, இருவரும் நின்று கொண்டனர்.

அப்போது போடி சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் இருவரும் உடல் இரண்டாக சிதறிய நிலையில் பலியாகினர். மதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டா, போடி எஸ்.ஐ., ஆல்வின், ஏட்டு சஞ்சய் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிதறிய இருவரின் உடல் பாகங்களை சேகரித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

இளம்பெண் பெற்றோர் பொள்ளாச்சி போலீசில் பெண்ணை காணவில்லை என மார்ச் 13ல் புகார் தெரிவித்துள்ளனர். டூவீலர் கைப்பற்றப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us