Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அழுகிய நிலையில் தொழிலாளி உடல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

அழுகிய நிலையில் தொழிலாளி உடல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

அழுகிய நிலையில் தொழிலாளி உடல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

அழுகிய நிலையில் தொழிலாளி உடல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

ADDED : மே 15, 2025 02:51 AM


Google News
கண்டமங்கலம்: கண்டங்கலம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த கூலித் தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கண்டமங்கலம் அருகில் உள்ள தாண்டவமூர்த்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ், 36; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு குட்லாயி என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு குட்லாயி தனது குழந்தைகளுடன் வீடூர் அடுத்த சிறுவை கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிவராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து போதை மயக்கத்தில் சாப்பிடாமல் துாங்கியுள்ளா். சிவராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது சிவராஜ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us