காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிப்பு
காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிப்பு
காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிப்பு
UPDATED : ஜூன் 01, 2025 05:26 AM
ADDED : ஜூன் 01, 2025 05:26 AM

தமிழக காற்றாலைகள் மூலம், 9,331 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். முன்னதாக மே மாதம், தென்மேற்கு பருவ காற்று தீவிரம் அடைந்தது. அதற்கேற்ப மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள மாவட்டங்களில், காற்றாலைகளின் மின் உற்பத்தி அதிகரித்தது.
கடந்த மார்ச், 8ல், 422 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, கடந்த மே, 19ல், 1,745; 25ல், 3,536; 26ல், 4,051; 27ல், 4,770 என படிப்படியாக உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம், 5,181 மெகாவாட் ஆக அதிகரித்தது.
அதேநேரம் தமிழக அனல், புனல், காற்றாலை, மத்திய மின்தொகுப்பு மூலம் மொத்தம், 18,038 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். நேற்று முன்தினம், 15,960 மெகாவாட் ஆக இருந்த தமிழக மின் தேவை, நேற்று, 14,548 மெகாவாட் ஆக குறைந்தது. இருப்பினும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால், அதை ஈடுசெய்யும்படி அனல்மின் உற்பத்தி குறைக்கப்பட்டது.
- நமது நிருபர் -