Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அடுத்த ஆண்டிலிருந்து பிரேக் பிடித்தால் போதுமா?: மத்திய அரசு முடிவால் சர்ச்சை

அடுத்த ஆண்டிலிருந்து பிரேக் பிடித்தால் போதுமா?: மத்திய அரசு முடிவால் சர்ச்சை

அடுத்த ஆண்டிலிருந்து பிரேக் பிடித்தால் போதுமா?: மத்திய அரசு முடிவால் சர்ச்சை

அடுத்த ஆண்டிலிருந்து பிரேக் பிடித்தால் போதுமா?: மத்திய அரசு முடிவால் சர்ச்சை

UPDATED : ஜூன் 23, 2025 06:13 AMADDED : ஜூன் 23, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
சென்னை: விபத்துகளை குறைக்க, அடுத்த ஆண்டு ஜனவரி, 1 முதல் உற்பத்தியாகும், அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், ஏ.பி.எஸ்., பிரேக்கிங் வசதியை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால், அடுத்த ஆண்டிலிருந்து இரு சக்கர வாகனங்கள் நன்றாக பிரேக் பிடித்தால் போதுமா, அதுவரை விபத்து நடந்தால் பரவாயில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நம் நாட்டில், 2019 முதல், 125 சி.சி.,க்கு மேல் உள்ள, அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், ஏ.பி.எஸ்., பிரேக்கிங் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது, 75 முதல் 125 சி.சி., வரை உள்ள பைக்குகளுக்கும், இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், முன்புற சக்கரத்திலாவது இந்த வசதி இருக்க வேண்டும்.

இந்த பாதுகாப்பு வசதியால், விபத்துகள், 35 முதல் 45 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், பைக்குகளின் விலை, 2,500 முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்கும்.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்க தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில், 1.96 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதில், 1.53 கோடி இரு சக்கர வாகனங்கள், 125 சி.சி.,க்கு உட்பட்டவை. இது, மொத்த விற்பனையில், 78 சதவீதம்.

கடந்த 2022ல், 4.61 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், இறந்தவர்கள் 1.68 லட்சம் பேர். மொத்த சாலை விபத்து இறப்புகளில், இரு சக்கர வாகனங்கள் வாயிலான இறப்புகள், 44 சதவீதமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில், 4,136 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 15 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு, 4,864 விபத்துகள் நடந்தன.

சாலை விபத்துகளில், பெரும்பாலான இறப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகின்றன என்பதால், அடுத்த ஆண்டு முதல் வாகன விற்பனையின் போது, இரு பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகள், பைக் உடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Image 1434201

அனைத்து கார்களுக்கும், 2019 முதல் ஏ.பி.எஸ்., வசதி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், இரு சக்கர வாகனங்களுக்கும், உடனடியாக ஏ.பி.எஸ்., பிரேக்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறாமல், அடுத்த ஆண்டில் இருந்து உற்பத்தியாகும் வாகனங்களில் கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'அடுத்த ஆண்டிலிருந்து வாகனங்கள் பிரேக் பிடித்தால் போதும். அதுவரை விபத்துகள் நடந்தால் பரவாயில்லை என, மத்திய அரசு நினைக்கிறதா' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

விபத்துகளை தடுக்க, இனி உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை வாகனங்களிலும், ஏ.பி.எஸ்., பிரேக்கிங் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என, வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பது, பொது மக்களின் விருப்பமாக உள்ளது.

நாடு முழுதும் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் விபரம்:

ஆண்டு இறப்புகள்2018 1,57,2932019 1,58,9842020 1,38,3832021 1,53,9722022 1,68,491



நாடு முழுதும் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் விபரம்:

ஆண்டு இறப்புகள்2018 1,57,2932019 1,58,9842020 1,38,3832021 1,53,9722022 1,68,491



ஏ.பி.எஸ்., பிரேக்கிங் ஏன்?

வாகனங்களை ஓட்டும் போது, உடனடியாக, 'பிரேக்' பிடித்தால், பைக் டயர்கள் வழுக்காமல், பைக் நிலையாக நிற்க, ஏ.பி.எஸ்., பிரேக்கிங் வசதி பயன்படுகிறது. இந்த அம்சம் இல்லாவிட்டால், திடீரென பிரேக் பிடிக்கும் போது, வாகன சக்கரங்கள் சறுக்கி, ஓட்டுநர் கீழே விழுந்து காயங்கள் அல்லது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us