பீஹார் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி., குறைப்பா?
பீஹார் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி., குறைப்பா?
பீஹார் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி., குறைப்பா?
ADDED : செப் 07, 2025 06:21 AM

நீண்ட காலத்திற்குப் பின், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி., வரியை, மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு 5 சதவீதமாகவும், சிலவற்றுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இத்தனை ஆண்டுகளாக மிக அதிக ஜி.எஸ்.டி., வரியால் எளிய மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர் என்பதை, மத்திய அரசு ஒப்புக்கொள்கிறதா?
தமிழகம் போன்ற அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலங்கள், மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது, கூட்டாட்சித் தத்துவத்திற்குச் சற்றும் உகந்தது இல்லை. பீஹார் தேர்தலுக்காக இந்த வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
- அருண்ராஜ், கொள்கை பரப்பு பொதுச்செயலர், த.வெ.க., ***