குறுவை தொகுப்பை அறிவிக்காதது ஏன்?
குறுவை தொகுப்பை அறிவிக்காதது ஏன்?
குறுவை தொகுப்பை அறிவிக்காதது ஏன்?
ADDED : ஜூன் 13, 2025 01:18 AM
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவைத் தொகுப்புத் திட்டம், இதுவரை அறிவிக்கப்படவில்லை. நெல்லுக்கு தமிழக அரசு வழக்கமாக வழங்கி வரும் கொள்முதல் விலையை, முறையே 26 ரூபாய், 36 ரூபாய் வீதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது சாதனையல்ல.
பா.ஜ., ஆட்சி நடக்கும் ஒடிசாவில் குவிண்டாலுக்கு, 800 ரூபாய், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் தெலுங்கானாவில் குவிண்டாலுக்கு, 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல தமிழக அரசும், 800 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை.
விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ளதாக கூறும் தமிழக அரசு, அது உண்மை என்றால், நெல்லுக்கான கொள்முதல் விலைக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, 800 ரூபாயாக உயர்த்த வேண்டும். அது மட்டுமின்றி, குறுவைத் தொகுப்புடன் ஏக்கருக்கு, 5,000 ரூபாய் ஊக்குவிப்பு மானியம் வழங்க வேண்டும்.
அன்புமணி, தலைவர், பா.ம.க.,