தியாகராஜனை மாற்றியது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தியாகராஜனை மாற்றியது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தியாகராஜனை மாற்றியது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
ADDED : பிப் 23, 2024 11:31 PM
சென்னை:சென்னையில் துவங்கிய, தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜனை பாராட்டினார்.
அவர் பேசியதாவது:
இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள, அமைச்சர் தியாகராஜனுக்கு பாராட்டுக்கள். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்குச் சொந்தக்காரர்.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான, திருச்சி என்.ஐ.டி.,யிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்.ஐ.டி.,யிலும் படித்தவர்.
நம் ஆட்சியில், முதல் இரண்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக, மிக சிறப்பாக செயல்பட்டு, பல மாற்றங்களுக்கு வித்திட்டார். அவரை நான் ஐ.டி., துறைக்கு மாற்றியதற்கு காரணம், ஐ.டி., துறையிலும், நிதித்துறை போல் மாற்றங்கள் தேவைப்பட்டது.
அவரது தலைமையில், தகவல் தொழில்நுட்பத்துறை வழியாக, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் நிச்சயம் அதிகமாகும்.
இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.