தேர்தல் கமிஷன் ரத்து செய்த தமிழக அரசியல் கட்சிகள் எவை?
தேர்தல் கமிஷன் ரத்து செய்த தமிழக அரசியல் கட்சிகள் எவை?
தேர்தல் கமிஷன் ரத்து செய்த தமிழக அரசியல் கட்சிகள் எவை?
ADDED : செப் 21, 2025 12:41 AM
சென்னை:தமி ழகத்தில் தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ள கட்சிகளில், ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப் படுகிறது.
மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின்படி, புதிதாக துவங்கும் அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் கட்சிகள், ஆறு ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டும்; இல்லையெனில் அக்கட்சியின் பதிவுகள் நீக்கப்படும்.
அதன்படி, தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை கண்டறிந்து, நீக்கும் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
முதல் கட்டமாக, தமிழகத்தில் 42 உட்பட நாடு முழுதும் 474 கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள கட்சிகளில், ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இவைகள் தவிர, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகம், என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமீமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.