Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விஜயதரணி செய்தது பச்சை துரோகம் சட்டசபை காங். தலைவர் ராஜேஷ்குமார் காட்டம்

விஜயதரணி செய்தது பச்சை துரோகம் சட்டசபை காங். தலைவர் ராஜேஷ்குமார் காட்டம்

விஜயதரணி செய்தது பச்சை துரோகம் சட்டசபை காங். தலைவர் ராஜேஷ்குமார் காட்டம்

விஜயதரணி செய்தது பச்சை துரோகம் சட்டசபை காங். தலைவர் ராஜேஷ்குமார் காட்டம்

ADDED : பிப் 25, 2024 12:52 AM


Google News
திருநெல்வேலி:முகவரி வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு விஜய தரணி பச்சை துரோகம் இழைத்து விட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் குற்றம் சாட்டினார்.

திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: காங்கிரசில் பெண் என்ற அடிப்படையில் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முகவரி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு பச்சை துரோகம் இழைத்து விட்டார். சுயநலத்தோடு பா.ஜ.,வில் இணைந்துள்ளார். காங்கிரசின் கொள்கை வேறு. பா.ஜ.,வின் கொள்கை வேறு. எனவே இது மோசமான செயலாகும். அவருக்கு கன்னியாகுமரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். கன்னியாகுமரியில் விஜயதரணி போட்டியிட்டால் டெபாசிட் பெற முடியாத அளவு செய்வோம். அவர் வெளியேறியதால் எங்களுக்கு பாதிப்பு கிடையாது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் சந்தேகத்தை தருகிறது என்றார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்களுக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை. தமிழகத்தை மாற்றான் தாய்பிள்ளை போல மத்திய அரசு பார்க்கிறது. தமிழகத்திற்கு பல முறை பிரதமர் மோடி வந்து சென்றுள்ளார்.

தற்போது வருவதால் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை, என்றார்.

உருவப்படம் எரிப்பு


விஜயதரணி பா.ஜ.,வில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்த்தாண்டத்தில் காங்கிரசார் அவரது உருவப்படத்தை எரித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us