ஐதராபாத் - மதுரை - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்
ஐதராபாத் - மதுரை - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்
ஐதராபாத் - மதுரை - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்
ADDED : ஜூன் 30, 2025 11:50 PM
சிவகங்கை:
ஐதராபாத் --மதுரை - -கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஐதராபாத் - -கன்னியாகுமரி (வண்டி எண்: 07230) சிறப்பு ரயில் ஜூலை 2 முதல் 23 வரை புதன் தோறும் மாலை 5:20 மணிக்கு ஐதராபாத்தில் புறப்பட்டு, வெள்ளி தோறும் மதியம் 2:30 மணிக்கு கன்னியாகுமரி சேரும். ஜூலை 4 முதல் 25 வரை வெள்ளி தோறும் மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரியில் (வண்டி எண்: 07229) இருந்து புறப்படும் இந்த ரயில் சனியன்று மதியம் 2:30 மணிக்கு ஐதராபாத் சேரும்.
இந்த ரயில் செகந்திராபாத், சார்லபள்ளி, நால்குண்டா, மிர்யாலாகுடா, நாடிகுடே, குண்டூர், தெனாலி, சிரலா,ஓங்கோல், நெல்லுார், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, பாகலா, சித்துார், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஸ்டேஷன்களில் நிற்கும். இரண்டு அடுக்கு ஏ.சி., 3 அடுக்கு ஏ.சி., துாங்கும் வசதி (ஸ்லீப்பர் கோச்) கொண்ட பெட்டி, இரண்டாம் வகுப்பு பொது பிரிவு பெட்டிகள் இடம் பெறும்.