பாக்.,கிற்கு ஆயுதங்களா: சீனா விளக்கம்
பாக்.,கிற்கு ஆயுதங்களா: சீனா விளக்கம்
பாக்.,கிற்கு ஆயுதங்களா: சீனா விளக்கம்
ADDED : மே 13, 2025 02:43 AM

பீஜிங் :'சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு, சீனா ஆயுதங்கள் வழங்கியது' என கூறப்படுவதை, சீன ராணுவம் மறுத்துள்ளது. அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது வழக்கு தொடரப்படும் என அந்த நாடு எச்சரித்துள்ளது.
சீனாவின் மிகப் பெரிய ஆயுத விற்பனை நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. பாகிஸ்தான் பயன்படுத்தும் 81 சதவீத ஆயுதங்கள், சீனாவில் இருந்து வந்தவை தான்.
இந்நிலையில், சமீபத்தில் பல ஊடகங்களில், சீனாவின் போர் தந்திரங்கள் குறித்து வெளியான செய்தியில், சீனாவின் மிகப் பெரிய சரக்கு விமானத்தில் போர் ஆயுதங்களை ஏற்றி வந்து, பாகிஸ்தானுக்கு வழங்கியது என கூறப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் வகையில், சீன ராணுவத்தின் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பயணியர் அல்லது சரக்கு விமானம் என்ற போர்வையில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சீனா வழங்கியது என கூறப்படுவதில் உண்மையில்லை. அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.