தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளுக்கு விஜய் நாடகம்
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளுக்கு விஜய் நாடகம்
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளுக்கு விஜய் நாடகம்
ADDED : செப் 22, 2025 01:57 AM

'இண்டி' கூட்டணி கட்சியினர், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் காசா பிரச்னைக்கு குரல் கொடுக்கின்றனர். பஹல்காம் தாக்குதல், வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீது தாக்குதல், கோவை குண்டு வெடிப்பு பற்றி பேசவில்லை. காசாவில் தாக்குதலுக்கு, பிரதமர் மோடி காரணம் என்கின்றனர்.
ஆனால், இந்திய அரசு தான் காசாவில் போர் நிறுத்தம் செய்வது பற்றி பேசி வருகிறது. அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புகிறது.
அப்படி இருக்கையில் இவ்வாறு குற்றம் சாட்டுவது, தமிழக வாக்காளர்களை மத அடிப்படையில் பிரிப்பதற்கான முயற்சி. இவர்கள் தி.மு.க.,விற்கு ஓட்டு வாங்க இதை செய்கி ன்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் கமல் செய்ததை, வரும் தேர்தலுக்காக விஜய் செய்கிறார். தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் தன் கட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அவர் நாடகம் நடத்துகிறா ர்.
-- அர்ஜுன் சம்பத், நிறுவனர், ஹிந்து மக்கள் கட்சி