ADDED : பிப் 25, 2024 03:09 PM
திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., விஜயதரணி, நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தார்.
நெல்லையில் நிருபர்களை சந்தித்த அப்பாவு கூறுகையில், விஜயதரணி முறைப்படி ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். என்னை தொலைபேசியில் அழைத்து எம்.எல்.ஏ., பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். கடிதத்தை ஆய்வு செய்ததில், முறையாக விஜயதரணி பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். எனவே அவர் பதவி விலகலை நான் ஏற்றுக் கொள்கிறேன். இது குறித்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு,முறைப்படி விளவங்கோடு காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.