முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு

கூட்டணி இல்லை
த.வெ.க., செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: கொள்ளை எதிரிகள், பிளவுவாத சக்திகள் உடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி இல்லை. மலிவான அரசியல் ஆதாயத்திற்கு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய பா.ஜ., நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமதனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால் தமிழகத்தில் ஒரு போதும் எடுபடாது.
உறுதியான தீர்மானம்
கூட்டணி என்றாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும். தி.மு.க., மற்றும் பா.ஜ.,விற்கு எதிராக கூட்டணி இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன். இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்.
விவசாயிகளுக்கு ஆதரவு
நமது விவசாயிகளுக்காக நாம் உறுதியாக நிற்க வேண்டியது நமது கடமை. நாம் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். பரந்தூர் மக்களை ஏன் சந்திக்கவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும் தான் மக்கள் பற்றி அக்கறை இருக்குமா? பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலையம்
நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களை அழித்து விட்டு, மிக பெரிய நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை அழித்து விட்டு, அந்த இடத்தில் தான் விமான நிலையம் கட்டி ஆக வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. நீங்கள் ஏன் மக்களின் முதல்வர் என்று நாகூசாமல் சொல்கிறீங்க. உங்களுக்கும், பரந்தூர் விமான நிலையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்கள். 1500 குடும்பங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சாதாரணமாக தெரிகிறதா? இவ்வாறு விஜய் பேசினார்.