'அமித் ஷா சொல்லி ஆனந்த் வாயிலாக விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்'
'அமித் ஷா சொல்லி ஆனந்த் வாயிலாக விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்'
'அமித் ஷா சொல்லி ஆனந்த் வாயிலாக விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்'
ADDED : செப் 23, 2025 07:00 AM

திருநெல்வேலி : “த.வெ.க., தலைவர் விஜய், பின்புலத்தில் பா.ஜ., உள்ளது,” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மஹாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை. ஆனால், அங்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொதுக்கூட்டங்களில், சினிமாவில் பேசுவது போல அகந்தையோடு பேசுகிறார். அவருக்கு பின்புலத்தில் பா.ஜ., இருப்பது தான், அவர் அகந்தைக்கான காரணம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லித்தான், அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வாயிலாக விஜய் கட்சி துவங்கப்பட்டது.முதல்வரை மிரட்டும் தொனியில் விஜய் பேசுவதே, பா.ஜ., அவரை இயக்குகிறது என்பதைத்தான் காட்டுகிறது.
'என் பிரசாரத்துக்கு ஆயிரம் நிபந்தனைகளை விதிக்கும் தமிழக அரசு, பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ தமிழகத்துக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டால், இதே போல நெருக்கடிகளை கொடுப்பரா?' என பேசியுள்ளார்.
ஆனால், முதல்வருக்கும், பிரதமருக்கும் இருக்கும் பாதுகாப்பு புரோட்டோகால் வேறு; விஜய்க்கு இருப்பது வேறு. இரண்டையும் ஒன்றாக எப்படி பாவிக்க முடியும்.
விஜய், யார் குறித்துப் பேசினாலும், மரியாதையுடன் பேச வேண்டும். த.வெ.க.,வை பார்த்து, ஆளும் தி.மு.க., பயப்பட வேண்டிய அவசியமில்லை. விஜய் போல ஆயிரம் விஜய்களை பார்த்தது தி.மு.க.,
இவ்வாறு கூறினார்.