Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அழுக்குத்துணியில் லஞ்சப்பணம்: அள்ளி வீசிய டிரைவர்; பட்டுக்கோட்டை நகராட்சி படாதபாடு

அழுக்குத்துணியில் லஞ்சப்பணம்: அள்ளி வீசிய டிரைவர்; பட்டுக்கோட்டை நகராட்சி படாதபாடு

அழுக்குத்துணியில் லஞ்சப்பணம்: அள்ளி வீசிய டிரைவர்; பட்டுக்கோட்டை நகராட்சி படாதபாடு

அழுக்குத்துணியில் லஞ்சப்பணம்: அள்ளி வீசிய டிரைவர்; பட்டுக்கோட்டை நகராட்சி படாதபாடு

UPDATED : ஆக 03, 2024 08:06 AMADDED : ஆக 03, 2024 08:00 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தஞ்சாவூர், - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று (ஆக.02) இரவு 8:00 மணியில் இருந்து இன்று(03ம் தேதி) அதிகாலை 6:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பணம் பறிமுதல்




அப்போது, நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இடத்திற்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்ச பணத்தை பெற்று மறைத்து வைத்து இருந்த பொறியாளர் மனோகரனிடம் இருந்து 84 ஆயிரம் ரூபாய், கான்ட்ராக்டர் எடிசன் என்பவரிடம் இருந்து 66 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், போலீசாரை கண்ட நகராட்சி கமிஷனர் குமரனின் டிரைவர் வெங்கடேஷன் நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாயை துாக்கி வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கமிஷனர் குமரன் தனது வீட்டிற்கு 5 லட்சம் ரூபாயை, எடுத்துச் செல்ல டிரைவரின் அழுக்கு துணிகளுடன் மறைக்க கூறி இருந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கமிஷனர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன், டிரைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைவரின் வீடுகளில் சோதனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us