டிராக்டர் மீது வேன் மோதல் 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்
டிராக்டர் மீது வேன் மோதல் 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்
டிராக்டர் மீது வேன் மோதல் 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்
ADDED : பிப் 11, 2024 01:13 AM

திருமங்கலம்,:மதுரையில் இருந்து விருதுநகருக்கு டிராக்டரில் பேவர் பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு டிரைவர் ராஜேந்திரன் சென்றார். பேவர் பிளாக் கற்கள் மீது தொழிலாளர்கள் சின்ன உலகாணி பாண்டி, 46, மதுரை காமராஜர்புரம் மாரியம்மாள், 56, ஆகியோர் அமர்ந்து சென்றனர்.
திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கே.வெள்ளாகுளம் பிரிவு அருகே அதிகாலை, 2:00 மணிக்கு சென்றபோது, மதுரையில் இருந்து தென்காசிக்கு வீடு மாற்றி பொருட்களை ஏற்றிச் சென்ற மினி வேன், டிராக்டர் மீது மோதியது.
இதில், டிராக்டர் கவிழ்ந்து பாண்டி, மாரியம்மாள் இறந்தனர். தென்காசி மாவட்டம், கடையத்தை சேர்ந்த வேன் டிரைவர் ராமகிருஷ்ணன் காயமடைந்தார்.
விபத்துக்குள்ளான டிராக்டருக்கு முன்னால் மற்றொரு டிராக்டரில் சென்ற கொக்குளம் கவிதா, முத்தையா, சந்தோஷ் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையில் இருந்து விருதுநகருக்கு சென்ற மற்றொரு மினி வேன் ஏற்கனவே விபத்துக்குள்ளான வேன் மீது மோதியது.
இதில், கவிதா, முத்தையா, சந்தோஷ், டிரைவர் விருதுநகர் சஞ்சய் ஆகியோர் காயமடைந்தனர்.கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.