வனத்துறையினருக்கு சீருடை: அலவன்ஸ் உயர்த்தி உத்தரவு
வனத்துறையினருக்கு சீருடை: அலவன்ஸ் உயர்த்தி உத்தரவு
வனத்துறையினருக்கு சீருடை: அலவன்ஸ் உயர்த்தி உத்தரவு
ADDED : ஜூன் 30, 2025 11:49 PM
கம்பம்:
வனத்துறையினருக்கு ஆண்டிற்கு ஒருமுறையான சீருடை அலவன்ஸ் ரூ.2800 ஐ ரூ.4500 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சீருடை அலவன்ஸ் உயர்த்தி வழங்க நீண்ட காலமாக வனத்துறையினர் கோரிக்கைவிடுத்தனர். அதை ஏற்று வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாகு , வனத்துறை பணியாளர்களுக்கு தற்போதைய அலவன்ஸ் ரூ.2800ல் இருந்து ரூ.4500 ஆக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பித்துள்ளார். தையல் கூலியும் இதில் அடங்கும்.
தமிழகத்தில் வனத்துறையில் 539 ரேஞ்சர்கள், 1146 வனவர்கள், 2053 வனக் காப்பாளர்கள், 540 வனக் காவலர்கள் என மொத்தம் 4404 பேருக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரேஞ்சர்கள் மற்றும் வனவர்கள் ரூ.2800 , இதர பணியாளர்கள் ரூ.2650 சீருடை அலவன்ஸ் பெற்றனர். தற்போது ரேஞ்சர் முதல் வனக்காவலர் வரை ஒரே மாதிரியாக சீருடை அலவன்ஸ் ரூ.4500 என அறிவிக்கப்பட்டுள்ளது.