Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இருசக்கர வாகன விபத்துகள் 2 ஆண்டில் 16,172 பேர் பலி

இருசக்கர வாகன விபத்துகள் 2 ஆண்டில் 16,172 பேர் பலி

இருசக்கர வாகன விபத்துகள் 2 ஆண்டில் 16,172 பேர் பலி

இருசக்கர வாகன விபத்துகள் 2 ஆண்டில் 16,172 பேர் பலி

UPDATED : ஜூன் 30, 2025 10:22 AMADDED : ஜூன் 30, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கியதில், 16,172 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில், 3.76 கோடி வாகனங்கள் உள்ளன. இவற்றில் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை 3.15 கோடி. இருசக்கர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து விதிகளை மீறுவதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல உயிரிழப்பும் அதிகரிக்கிறது. இதை தடுக்க விழிப்புணர்வு அவசியம்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்களில், 80 சதவீதத்திற்கு மேலாக இருசக்கர வாகனங்கள் தான் உள்ளன. அதை ஓட்டிச் செல்வோர், பின்னால் அமர்ந்து செல்வோர், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம். அதேபோல, 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்.

ஆனால், பெரும்பாலான குடும்பங்களில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர் ஊக்குவிக்கின்றனர். ஓட்டுநர் உரிமம் பெறாத சிறுவர்கள், இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்வதால், விபத்துகள் அதிகம் நடக்கின்றன.

அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மொபைல் போனில் பேசியபடி செல்வது, இடது, வலதுபுறம் வாகனங்களை கவனிக்காமல் திருப்புவது உள்ளிட்ட காரணங்களால், விபத்துகள் அதிகம் நடக்கின்றன. 50 சதவீத இருசக்கர வாகனங்களில், பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லை.

Image 1437070

இதனால், பின்னால் வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் விபத்து நேரிடுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை நடுவில் செல்வது, திடீரென பிரேக் பிடிப்பது, எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது போன்றவையும் விபத்துக்கு காரணமாகின்றன.

இருசக்கர வாகனத்தை, 5 சதவீதம் பேர் தான் முறையாக பராமரிக்கின்றனர். மற்றவர்கள் முறையாக பராமரிப்பதில்லை. அதுவும் விபத்துக்கு காரணம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 60,502 இருசக்கர வாகன விபத்துகள் நடந்துள்ளன. அதில், 16,172 பேர் இறந்துள்ளனர். விபத்துகளை தடுக்க, வாகன ஓட்டிகள் விழிப்புணர்வோடு செயல்படுவதுடன், வாகனங்களை முறையாக பராமரித்தும், போக்குவரத்து விதிகளை மதித்தும் நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us