ADDED : ஜன 05, 2024 01:28 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையாபுரத்தில் துறைமுகத்துக்கு சென்ற சரக்கு லாரி மோதியதில் பெண், ஐந்து வயது சிறுவன் பலியாயினர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் நேற்று காலை 10:00 மணியளவில் டீக்கடையில் நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஐந்து வயது சிறுவனும் ரோட்டை கடந்தனர். அப்போது தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்தில் இருவரும் பலியாயினர். அவர்களின் பெயர், விபரம் நேற்று மாலை வரை தெரியவில்லை. முத்தையாபுரம் போலீசார் விசாரித்தனர்.