நகராட்சி தலைவரிடம் மாமுல் கேட்டு மிரட்டிய இருவர் கைது
நகராட்சி தலைவரிடம் மாமுல் கேட்டு மிரட்டிய இருவர் கைது
நகராட்சி தலைவரிடம் மாமுல் கேட்டு மிரட்டிய இருவர் கைது
ADDED : செப் 24, 2025 11:58 PM
சிவகங்கை:சிவகங்கை நகராட்சி தலைவரிடம் மாமுல் கேட்டு தர மறுத்ததால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய இருவரை நகர் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை நகராட்சி தலைவர் துரைஆனந்த். தி.மு.க., நகர செயலாளராகவும் உள்ளார். சிவகங்கை மானாமதுரை ரோட்டில் சாமியார்பட்டி விலக்கு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு வேலுார் சிவசூரியன் மகன் நல்லுசாமி, இடைக்காட்டூர் நடராஜன் மகன் அஜித் சென்று மாமுல் கேட்டு மிரட்டியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு ஹோட்டலுக்கு மீண்டும் சென்ற நல்லுசாமி மற்றும் அஜித் ஓட்டல் மேனேஜர் சரவணனிடம் உங்கள் ஓனர் எங்கே இருக்கிறார். நாங்கள் பலமுறை மாமூல் கேட்டும் தரவில்லை என மிரட்டியுள்ளனர். பின்னர் தன்னை போனில் தொடர்பு கொண்டு நீ ஊரில் வாழமுடியாது, உண்னையும், உன் குடும்பத்தையும் அழித்து விடுவோம் என மிரட்டல் விடுத்ததாக துரைஆனந்த் சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார். நல்லுசாமி, அஜித்தை போலீசார் கைது செய்தனர்.