டூ - வீலர் மீது லாரி மோதல்; மேட்டூர் அருகே தம்பதி பலி
டூ - வீலர் மீது லாரி மோதல்; மேட்டூர் அருகே தம்பதி பலி
டூ - வீலர் மீது லாரி மோதல்; மேட்டூர் அருகே தம்பதி பலி
ADDED : ஜன 29, 2024 12:07 AM
மேட்டூர் : சேலம் மாவட்டம், மேட்டூர், கருமலைக்கூடல், வீரக்கல்புதுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி அழகரசன், 30. இவரது மனைவி இளமதி, 25.
இவர்கள் மகன்கள் கிஷோர், 5, கிருத்திக், 2. அழகரசன் உள்ளிட்ட குடும்பத்தினர், வீரக்கல்புதுாரில் இருந்து, 'ஹோண்டா' பைக்கில் கொளத்துார், பூதப்பாடியில் நேற்று காலை, 9:15 மணிக்கு சென்றனர்.
அழகரசன், 'ஹெல்மெட்' அணியாமல் பைக்கை ஓட்டினார். ராமன் நகர் வேகத்தடையில் முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது. அப்போது லாரி பின்னால் பைக்கில் வந்த அழகரசன் தன் வாகனத்தை நிறுத்த, பின்னால், கர்நாடகாவில் இருந்து நெல் மூட்டை ஏற்றி வந்த சரக்கு லாரி, பைக்கின் பின்புறம் மோதியது.
இதில், பைக் நசுங்கியது. பைக்கில் இருந்த அழகரசன், இளமதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த அவர்களின் இரு மகன்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கருமலைக்கூடல் போலீசார், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர், திருச்சி, சமயபுரத்தை சேர்ந்த லோகநாதன், 50, என்பவரை கைது செய்தனர்.