சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க பயிற்சி
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க பயிற்சி
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க பயிற்சி
ADDED : ஜூன் 07, 2025 11:03 PM
சென்னை:சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பது தொடர்பாக, சென்னையில் மூன்று நாள் பயிற்சிக்கு, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நிறுவன அலுவலகத்தில், வரும், 18 முதல் 20ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
இதில், சூரிய மின்சக்தி துறையில், தொழில் முனைவோரின் அடிப்படை தேவைகள், சூரிய மின்சார மென்பொருட்கள், திட்டம் வடிவமைப்பு, நிதி திட்டமிடல், மானிய திட்டங்கள், வணிக மேம்பாடு, வணிக விளம்பர பயிற்சி, நிதி திட்டமிடல் உள்ளிட்ட வழிமுறைகள் கற்று தரப்படும்.
இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ள தொழில் முனைவோர், 18 வயதுக்கு மேற்பட்ட, 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்கள், www.editn.in என்ற இணையதளத்தில் உள்ளன.