ADDED : செப் 06, 2025 08:46 PM
போலீஸ் எஸ்.ஐ.,க்கள், 361 பேருக்கு, ஆறு வாரங்களுக்கான பயிற்சி வகுப்பு, அக்., 6ம் தேதி துவங்கி, நவ., 15 வரை நடக்க இருப்பதாக, காவல் உயர் பயிற்சியக டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பதவி உயர்வுக்கு தகுதி பெறும் எஸ்.ஐ.,க்கள், 361 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல், டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, காவல் உயர் பயிற்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.