நெல்லை-திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து!
நெல்லை-திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து!
நெல்லை-திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து!
ADDED : மார் 15, 2025 08:07 AM

சென்னை: நெல்லை, திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை; நெல்லையில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், மறுமார்க்கமாக திருச்செந்தூர், நெல்லை இடையே இயக்கப்படும் ரயில் மார்ச் 20ம் தேதி முதல் ஏப்.13 வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.