மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்: பாதுகாப்பு தர திருமாவளவன் வலியுறுத்தல்
மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்: பாதுகாப்பு தர திருமாவளவன் வலியுறுத்தல்
மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்: பாதுகாப்பு தர திருமாவளவன் வலியுறுத்தல்

விசாரணை
ஆகவே, அந்த பின்னணியை கண்டறிய வேண்டியது இந்த வழக்குக்கும் அவசியமானதாக தெரிகிறது. அவருக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை நீதிமன்றத்தில் அரசு மறுத்துள்ளது. நிகிதாவை சுற்றி, இதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தனி வழக்காக பதிவு செய்து அவரிடம் விசாரிக்க வேண்டும்.
வாழ்த்துகள்
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மேற்கொள்ளும் தமிழகம் காப்போம் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். கல்விக்கான நிதியை தரக் கோரி , பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் முறையிட்டார். இதன் பிறகும் நிதியை தர தயாராக இல்லை என்பது அவர்களின் தமிழகத்தின் மீதான கரிசனத்தை தெரிந்து கொள்ளலாம். தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு கொண்டு, தி.மு.க.,வுக்கு எதிராக செய்வதை போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழக மாணவர்களுக்கு தர வேண்டிய நிதியை தராமல் முடக்குவது தமிழகத்துக்கு எதிரானது. அது திமுக.,வுக்கு எதிரானது அல்ல. அரசுக்கு எதிரானது அல்ல. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.