நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய போக்சோ
பா.ஜ., நிர்வாகி சிக்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் எழில்இசை, 24; பா.ஜ., நகர இளைஞரணி துணைத்தலைவர். இவர், கராத்தே பயிற்சியும் அளித்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன், இவர் பயிற்சி அளித்த மாணவிக்கு, ஆண் குழந்தை பிறந்தது.
சிறுமியை கடத்தியவர் கைது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்தார். ஏப்., 3ம் தேதி, கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் முசிறி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாயமான சிறுமியை தேடினர்.
முதியவர் மீது 'போக்சோ'
பெருமாநல்லுார், படையப்பா நகரை சேர்ந்தவர் சர்தார் சேட், 64. இவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுமியை சாக்லேட் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். சிறுமி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வீட்டில் நுழைந்து சிறுமியை மீட்டனர்.
பா.ஜ., நிர்வாகி கைது
திருப்புவனம் பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் உறவினர்கள் ராஜ்குமாரை தாக்கி அதனை படம் எடுத்து சமூக வலை தளத்தில் பரப்பினர். மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் ராஜ் குமாரை கைது செய்தனர். ராஜ்குமார் வேனில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் பணி செய்து வந்தார்.
சிறுமிக்கு தொந்தரவு
நிலக்கோட்டை அடுத்த விருவீடு தெற்கு வலையப்பட்டியை சேர்ந்தவர் நிதிஷ் 20. அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். விருவீடு போலீசார் நிதிஷை போக்சோவில் கைது செய்தனர்.இதன் வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நிதிஷிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை , ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார். அரசு வக்கீலாக ஜோதி வாதிட்டார்.