'விஜயை பார்த்து பயப்படுவதால் விமர்சிக்கின்றனர்'
'விஜயை பார்த்து பயப்படுவதால் விமர்சிக்கின்றனர்'
'விஜயை பார்த்து பயப்படுவதால் விமர்சிக்கின்றனர்'
ADDED : செப் 21, 2025 05:53 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: 'விஜயை பார்த்து, 75 ஆண்டு பாரம்பரிய கட்சிகள் கூட பயப்படுவதால் அவரை விமர்சிக்கின்றனர்' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயை பார்த்து, 75, 50, 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சிகள் எல்லாம் பயப்படுகின்றன. அதனால் தான், அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
தமிழக மக்கள் நலனுக்காக அமையும் நல்ல கூட்டணியில், புதிய தமிழகம் பங்கேற்கும். கடந்த தேர்தலுடன் ஒரு கட்சி ஆட்சி முடிந்து விட்டது.
இனிமேல், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். எந்த கூட்டணியில் புதிய தமிழகம் இருந்தாலும், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.