Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல்

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல்

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல்

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல்

ADDED : ஜூன் 19, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, மாநாடு வளாகத்தில் அறுபடை வீடுகளின் அருட்காட்சி நடைபெறுகிறது.

கோபுரம் முதல் மூலவர் வரை அறுபடை கோவில்களில் இருப்பது போல் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய அறுபடை வீடுகளில் வைத்து வழிபாடு நடத்திய வேல் வைக்க ஹிந்து முன்னணி திட்டமிட்டது.

கடந்த வைகாசி விசாகத்தன்று, அறுபடை வீடுகளில் வேல்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டன. நேற்று மாலை, 5:00 மணிக்கு அனைத்து வேல்களும் அருட்காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. கைலாய வாத்தியங்கள் முழங்க ஆறு குழுக்கள் அடங்கிய பக்தர்கள் பேரணியாக கொண்டு வந்து சன்னதியில் சேர்த்தனர். 'அரோகரா' கோஷம் முழங்க திரளான பக்தர்கள் வழிபட்டனர். பின், வேல் தீபாராதனை காட்டப்பட்டு அந்தந்த சன்னதி மூலவர் அருகே வைக்கப்பட்டது.

நாட்டுபுற கலைஞர்களின் குழுவை சேர்ந்த சிறுவன் முருகன் வேடமிட்டு, சோலைமலையில் வைத்து வழிபாடு நடத்திய வேல் ஏந்தி வந்தார். அங்கிருந்த பக்தர்கள் முருகனே நேரில் வந்ததாக எண்ணி வேடமிட்டிருந்த சிறுவனை வணங்கினர். அவர் மேடையில் வேல் ஏந்தி நடனம் ஆடினார். பின், பக்தர்கள் இணைந்து 'கந்த சஷ்டி கவசம்' பாடினர்.

மாநாட்டிற்கு வருவோரின்நலன் கருதி மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாநாடு அரங்கத்திற்குள்ளே, வெளியேறும் வாயில்கள், வி.ஐ.பி., மேடை மற்றும் மேலுார், திருமங்கலம் டோல்கேட்டுகள் ஆகிய இடங்களில், நெடுஞ்சாலை மீட்புக்குழு உள்ளிட்ட, 13 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹிந்து முன்னணி மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் கூறுகையில், ''ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆம்புலன்சுடன் டாக்டர், அவசர சிகிச்சை தொழில்நுட்பனர்கள், நர்சுகள், தன்னார்வலர்கள் இருப்பர். மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள தனியார் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us