அமித் ஷாவுக்கு மிரளுகிற இயக்கம் தி.மு.க., அல்ல
அமித் ஷாவுக்கு மிரளுகிற இயக்கம் தி.மு.க., அல்ல
அமித் ஷாவுக்கு மிரளுகிற இயக்கம் தி.மு.க., அல்ல
ADDED : மார் 23, 2025 03:12 AM

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட ஏஜன்சிகளை, பா.ஜ., தங்களுடைய தோழமை கட்சியாக வைத்திருக்கிறது. அவர்களை வைத்து, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை ஏதாவது செய்ய முடியாதா என தவிக்கின்றனர்.
மத்திய பா.ஜ., அரசு, இதுவரை எந்த ஊழலையும் கண்டுபிடிக்கவில்லை. இல்லாததை எப்படி கண்டுபிடிக்க முடியும்? பா.ஜ., என்ன சொல்கிறதோ, அதையே அமலாக்கத்துறை அறிக்கையாக வெளியிடுகிறது. இதிலிருந்தே, அத்துறையை இயக்குவது யார் என்று புரிந்து கொள்ளலாம்.
தி.மு.க.,வை மிரட்டிப் பார்க்கலாம் என மத்திய அமைச்சர் அமித் ஷா, எதை எதையோ கூறுகிறார். இதற்கெல்லாம் மிரளுகிற இயக்கமா தி.மு.க.,? மொழிக் கொள்கையில் இழப்பது உயிராக இருந்தாலும், துணிந்து நிற்பேன் என முதல்வர் கூறியிருக்கிறார். இதற்கு மேல் பா.ஜ.,வுக்கு என்ன சொல்ல முடியும்?
- சேகர்பாபு
ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர்.