முற்றுகையிட்டோரை மேயரை கைகாட்டிய அமைச்சர்
முற்றுகையிட்டோரை மேயரை கைகாட்டிய அமைச்சர்
முற்றுகையிட்டோரை மேயரை கைகாட்டிய அமைச்சர்
ADDED : செப் 12, 2025 03:02 AM

வேலுார்: வேலுாரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், அடிப்படை வசதிகள் கேட்டு, அமைச்சர் துரைமுருகனை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வேலுார், சேண்பாக்கத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை வருவாய் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் பெற்றனர்.
முகாமை அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் சுப்புலெட்சுமி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
அப்போது முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த பெண்கள், அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்டு, தங்களது பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் துரைமுருகன், 'இதையெல்லாம் செய்து தர வேண்டியது மேயர் தான்; அவரிடம் கேளுங்கள்' என மேயரை கைகாட்டி விட்டார்.
இதையடுத்து, மக்கள் மேயர் சுஜாதாவை நோக்கிச் சென்றனர். முற்றுகையிட்ட மக்களை, தன்னை நோக்கி திருப்பி விட்ட அமைச்சர் துரைமுருகனை, விரக்தியோடு பார்த்தார் மேயர் சுஜாதா.