வருமான வரித்துறையினர் 3ம் நாளாக சோதனை
வருமான வரித்துறையினர் 3ம் நாளாக சோதனை
வருமான வரித்துறையினர் 3ம் நாளாக சோதனை
ADDED : ஜன 05, 2024 01:34 AM
சென்னை:கட்டுமான நிறுவன அலுவலகங்களில், நேற்று மூன்றாம் நாளாக, வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலகங்களில், கடந்த, மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை காளப்பட்டியில் உள்ள, கிரீன்பீல்டு ரியல் எஸ்டேட் நிறுவனம், அதன் உரிமையாளர் ராமநாதன் வீடு மற்றும் அலுவலகம் உள்பட ஆறு இடங்களில், வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குழந்தைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, சி.எம்.கே., ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம், குழந்தை சாமியின் வீடு, ஈரோடு, ரகுபதி நாயக்கன்பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி., கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் செல்வசுந்தரம் வீடு, ஈரோடு பெரியார் நகரில் உள்ள பி.வி.இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.
இதேபோல், சென்னையில் இந்த கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும், வருமான வரித்துறையினரின் சோதனை, நேற்றும் நீடித்தது. சோதனையில், கட்டுமான செலவுகள், ஒப்பந்தங்கள், முதலீடுகள் குறித்த ஆவணங்களை, அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து, வருமான வரித்துறை சார்பில், விரைவில் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கை வெளியாகும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.